search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி உயிரிழப்பு"

    ஊத்தங்கரை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    இதனால் மாணவி தனது தாத்தா- பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

    கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அந்த மாணவியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

    இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஏற்கனவே ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பம் அடைந்ததும் அந்த தகவலை மாணவியும், தமிழரசனும் மறைத்தது தெரியவந்தது.


    இதைத்தொடர்ந்து தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தற்போது மாணவி இறந்துவிட்டதால் தமிழரசன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. 

    கொளத்தூர் அருகே பிறந்த நாள் பரிசாக தந்தை செல்போன் வாங்கிக்கொடுக்காததால் தீக்குளித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
    மாதவரம்:

    கொளத்தூர் ஜி.கே.எம். காலனி ஜெயபிரகாஷ் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர் கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் மாலதி (18). தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள் இதை வீட்டில் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டினார்கள்.

    அப்போது தனது தந்தை பாஸ்கரிடம் பிறந்த நாள் பரிசாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை. பிறகு வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    இதனால் மனமுடைந்த மாலதி தனி அறைக்கு சென்று மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது தந்தை மகளை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் கை, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    மாணவி மாலதிக்கு உடலெங்கும் தீ பரவி படுகாயம் அடைந்தார். உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பிறந்த நாளை கொண்டாடிய சிறிது நேரத்தில் மாணவி மாலதி தீக்குளித்து இறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செல்போன் ஆசை விபரீதத்தில் முடிந்ததால் பெற்றோரும், உறவினரும் சோகத்தில் மூழ்கினார்கள். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×